இலங்கையின் 73 ஆவது சுதந்திரதினம்

2021-02-04 20:07:58
இராணுவ அணிவகுப்புகள், போர் வெற்றியை பறைசாற்றுகின்ற கோஷங்களுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்க மண்டப வளாகத்தில் நடைபெற்று முடிந்தது.
பிரதமர், அமைச்சர்கள், முப்படை பிரதானிகள், சர்வதேச இராஜதந்திரிகள் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேசிய கொடிகளை குறைத்து பெளத்த சிங்கள கொடிகளுடனும், இராணுவ கொடிகளுடனும் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதிதிகளின் வருகை இடம்பெற்றது. முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு பிரதானி, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரது பரியார், பிரதம நீதியரசர் மற்றும் அவரது பரியார், சபாநாயகர் மற்றும் அவரது பரியார், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பரியார் ஆகியோர் முறையே அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.
மேலும் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சின் செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனை அடுத்து தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டதுடன், 45 பாடசாலை மாணவ, மாணவிகளினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் ஜயமங்கல கீதம் பாடப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர் நீத்த சகல தேசாபிமானிகளுக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் விதமாக 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
இதனை அடுத்தே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றின் மரியாதை அணிவகுப்புகளும் அதனை தொடர்ந்து கலாசார அனுவகுப்புகளும் இடம்பெற்றன.

படங்கள்- ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right