மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட புரவி புயல்..!

Published on 2020-12-03 11:33:22

புரவி எனும் சூறாவளி தாக்கம் அனர்த்தமாக மாறும் என வளிமண்டவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலை அடுத்து திருகோணமலையில் உள்ள மக்களும் அச்சமடைந்துள்ளனர். அத்தோடு பல பிரதேசங்களில் வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது.