பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி விழா..!

Published on 2020-10-21 15:50:08

ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (2020.10.20) தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.