கொரோனா பரவலையடுத்து கம்பஹாவில் ஊரடங்கு நிலைமை 

Published on 2020-10-05 11:29:18


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக திவுலப்பிட்டியவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 69 பேருக்கு தோற்று உறுதிப்படுத்தப்பட்டமை சமூக தொற்றுக்கான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மினுவாங்கொடைவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 39 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் வெளிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டதுடன், முதற் கட்டமாக 150 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று காலை வெளியானது அவர்களது பி.சி.ஆர். முடிவிகளிலேயே 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.