வீரகேசரி இணையத்தளத்திற்கு வெள்ளி விருது

Published on 2020-09-11 17:11:47


2020 ஆம் ஆண்டிற்கான BestWeb.lk விருது வழங்கும் விழாவில் வீரகேசரி இணையத்தளம் வெள்ளி விருதை சுவீகரித்துள்ளது.

BestWeb.lk 2020 ஆம் ஆண்டிற்கான ( Best Media, Sports & Entertainment Website) சிறந்த ஊடகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இணையத்தளம் என்ற பிரிவில் virakesari.lk இணையத்தளம் இந்த விருதைப்பெற்றுள்ளது.

lk domain Registry நிறுவனத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் சிறந்த (BestWeb.lk) இணைய தளங்களுக்கான போட்டியில் வீரகேசரி இணையத்தயத்திற்கு வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கல் வைபவமானது, நேற்று கொழும்பு, சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
பொது வாக்களிப்பின் மூலமே இந்த விருதிற்கான தெரிவுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் BestWeb.lk ஆல் வழங்கப்பட்ட விருதுகளில் வீரகேசரி இணையத்தளம் பல விருதுகளை பெற்றிருந்த நிலையில், இந்த வருடமும் விருதொன்றை தனதாக்கியுள்ளது.

இலங்கையில் 90 வருட பழமைவாய்ந்த தேசிய பத்திரிகையின் இணையத்தளமாக விளங்கும் வீரகேசரி இணையத்தளம் ( virakesari.lk ) சுமார் 20 வருடங்களாக இணையத்தள செய்திச்சேவையை பல்வேறு பரிமாணங்களில் உலகளாவிய தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கி வருகின்றது.

வீரகேசரி இணையத்தளம் இம்முறை வெள்ளி விருதை வெற்றிகொண்டதற்கு இணையத்தள வாசகர்களாகிய உங்களின் பங்களிப்பு அளப்பரியது என்பதுடன் எமது இணையத்தளம் சார்பில் நன்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.