தங்க ரதத்தில் பவனி வந்த நல்லூர் கந்தன்

Published on 2020-08-15 10:16:34

நல்லூரில் நேற்று (14.08.2020) முருகன் பொன் வர்ணம் தீட்டப்பட்ட சிறிய தேரில் உலா வந்தான்.

ஆதவன் பொற்கிரணங்களை வீசும் மாலை வேளையில், மென்சிவப்பு (றோஸ்) நிற அலங்காரத்தில்
அவனது பவனி அழகு சேர்த்தது.

ஆடி கடைசி வெள்ளி தினமாதலில், வழமையை விட அதிகளவு அடியவர்கள் குழுமியிருந்தனர்.

சிறிய தேரில் சிறிய உருவினனாக, அவன் பெரிய வீதியில் வலம் வந்தமை அவன் அடியார்க்கு எளி வந்த பிரான் என்பதை உணர்த்துவது போலிருந்தது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்