நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தில் இடம்பெற்ற கார்த்திகை திருநாள்

Published on 2020-08-13 09:13:32

நல்லூர் பேராலய மஹோற்சவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.

இந்நிகழ்வில், ஸ்வர்ண மயூர வாகனத்தில் முருகப்பெருமானும் தனித்தனி அன்ன வாகனங்களில் தேவியரும் எழுந்தருளினர்.

அந்தணர்கள் தீவட்டி ஏந்த அகில் புகை மணம் எங்கும் வீச, செந்தமிழ் முருகன் பவனி வந்தான்.

கோபுர மாடங்களிலும் தீபம் பிரகாசிக்க, எழுந்தருளிய பெருமானுக்கு கோபுர வாயிலில் ஆறு சிவாச்சார்யர்கள் தீப ஆராதனை செய்தனர்.

நீல பட்டாடை புனைந்து நித்தியப் புன்னகை மன்னனாக கார்த்திகைகுமரன் இன்று நல்லூரில் காட்சி தந்தான்.

அவன் தானே தியாகையரின் இராமன் போலவும், இன்று தோன்றி பஞ்சரத்தின கீர்த்தனையும் வீதியில் கேட்டருளினான்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்