கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் சுமார் 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

Published on 2020-06-14 20:51:03

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேகாலை வர்த்தக மத்திய நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இவ்வாறு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் தீயணைக்கும் பணிகளை முன்னெடுத்தனர்.