அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் படுகொலை : கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கைது

Published on 2020-06-09 16:29:05

அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜோர்ஜ் பிளொய்ட் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற
ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் ஏற்கட்ட முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்த முன்னிலை சோசலிச கட்சியின் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படங்கள் - ஜே.சுஜீவகுமார்