அக்கினியோடு சங்கமித்தது அமரர் ஆறுமுகனின் பூதவுடல்

Published on 2020-05-31 18:54:49


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சற்றுமுன்னர் அக்கினியுடன் சங்கமமாகியது.

நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர், அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இருந்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று பிற்பகல் 2 மணியளவில் நோர்வூட் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் குறிப்பிடதக்கது.