மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு கொழும்பில் பலர் அஞ்சலி

2020-05-27 20:52:03
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது பூதவுடல் இன்று காலை பொரளை தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்ட அதேவேளை பிற்பகல் பொரளை தனியார் மலைசாலையில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் பத்தரமுல்லயில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை தொடக்கம் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெவ்வேறு துறைசார் பிரமுகர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் அவரது இல்லத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஷ்ணன், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க உட்பட மேலும் பல அரசியல் வாதிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்பை அடுத்து ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என அனைவரும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
மூத்த அரசியல் தலைவர்கள் பலர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்ற உருக்கமான வார்த்தைகளை தெரிவித்துள்ள நிலையில் இந்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இந்திய அரசியல் பிரமுகர்கள் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய ஊடகங்களில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் குறித்து பல்வேறு அனுதாப செய்திகள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right