மிக எளிமையான முறையில் இடம்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மணவாளக்கோல உற்சவம்

Published on 2020-05-19 21:35:05

நல்லூர் கந்தசுவாமி ஆலய மணவாளக்கோல உற்சவம் இன்று(19.05.2020) மிக எளிமையாக நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய மூலவருக்கு இன்று காலை சங்காபிஷேகம் இடம்பெற்றது.

மாலையில் சண்முகநாதப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றதுடன், சுவாமி உள்வீதியில் எழுந்தருளினார்.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்றைய உற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் ஐ.சிவசாந்தன்