முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் - கண்ணீர்மல்க மக்கள் அஞ்சலி

Published on 2020-05-18 13:05:21


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது்

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பொலிஸ் ,புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இன்று காலை 10.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.