திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு

Published on 2020-03-10 09:36:21

திருவள்ளுவர் குரு பூசைதினமான இன்று (10.03.2020) வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில்
அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி குரு பூசைதினம்
அனுஷ்ட்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழருவி சிவகுமாரன் சிறப்புரையினை நிகழ்த்தியிருந்தார்.

இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், நா.சேனாதிராஜா,
சுமந்திரன், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் கண்ணன், நகரசபை ஊழியர்கள், பொதுமக்கள்
என பலர் கலந்துகொண்டனர்.