விமான படையின் மாபெரும் சைக்கிள் ஓட்டம்

Published on 2020-03-07 14:05:05

சொப்லொயிக் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை விமானபடையினால் முன்னெடுக்கபட்ட மாபெரும் துவிச்சக்கரவண்டி ஓட்டம் இன்று காலை வவுனியாவை அடைந்தது.

குறித்த பயணம் கொழும்பில் ஆரம்பித்து நேற்றையதினம் திருகோணமலையை வந்தடைந்திருந்தது. இன்று காலை திருகோணமலையில் ஆரம்பித்த பயணம் இன்று வவுனியாவை வந்தடைந்தது.

வவுனியாவை அடைந்த குறித்த பயணத்தை  பழையபேரூந்து நிலையத்தில் வைத்து விமானபடை வீரர்கள் மற்றும் பொலிசார் வரவேற்றிருந்தனர்.