வவுனியாவில் மாபெரும் இரத்ததான முகாம்

Published on 2020-03-01 12:10:36


பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊழியரான அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் நான்காவது வருட நினைவாக
பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரி சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வவுனியா
பிரதேச அபிவிருத்தி வங்கியில் நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 1 மணி வரை இடம்பெற்றது.

அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் படத்திற்கு விளக்கேற்றி மலர் சூடி அஞ்சலி செலுத்தியதுடன் ஜம்பதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.