விசாலமான இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியால் திறப்பு

Published on 2019-11-08 17:03:09

பெலவத்த, அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவத் தலைமையகத்தை ஜனாதிபதி இன்று (08) முற்பகல் திறந்து வைத்தார்.

பெலவத்த, அக்குரேகொடயில் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைத் தலைமையகத்திற்கு கடந்த 2011 ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்கள் கலந்துகொண்டனர்.