தகவல் அறியும் உரிமையை சிறப்பாக பயன்படுத்தியவர்களுக்கு விருது

Published on 2019-10-16 16:53:20


சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு வெகுசன ஊடக துறை அமைச்சு கடந்த ஒருமாத காலமாக வெகுஜன ஊடக அமைச்சு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விளிப்புணர்வு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது.
அந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிறப்பாக பயன்படுத்திய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கௌரவித்து விருதுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் சமூக சிற்பிகள் அமைப்பு இலங்கை பிரஜைகளின் தகவல் அறியும் உரிமைகள் தொடர்பிலான தமது சிறப்பான நடவடிக்கைகளுக்காக குடியுரிமை பாராட்டு விருதுகள் இரண்டினை வென்றுள்ளது.
இவ் சமூக சிற்பிகள் அமைப்பானது இலங்கையில் பலதரப்பட்ட இனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் சமூக பொறுப்புக்கூறலையும் உறுதி செய்யும் வகையில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.