'மெடெஸ்­டி­னேஷன் இந்­தியா எக்ஸ்போ 2019' மருத்­துவக் கண்­காட்சி..!

Published on 2019-10-05 16:34:00

இந்தியாவின் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ நிலையத்துடன் தினத்தந்தி நாளிதழ் மற்றும் வீரகேசரி பத்திரிகை என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் 'மெடெஸ்டினேஷன் இந்தியா எக்ஸ்போ 2019' இருநாள் (4ஆம், 5ஆம் திகதிகள்) மருத்துவக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

நிகழ்வில் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன், தினத்தந்தி நாளிதழின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கந்தராஜா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதையும் இந்தியத் தூதுவர் மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஆகியோர் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி செந்தில்நாதனால் கௌரவிக்கப்படுவதையும் மருத்துவக் கண்காட்சியில் பங்கேற்றோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எம்.எஸ்.சலீம்)