மம்தா மோகன்தாஸ் நடிக்கும் "ரவுடி மாப்ளே"

Published on 2016-02-08 11:43:26

பல மொழிமாற்றுப் படங்களைத் தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம், மீடியாவின் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ ரவுடி மாப்ளே “ என்று பெயரிட்டுள்ளனர்.
தெலுங்கில் கிருஷ்ணா – அர்ஜுனா என்ற பெயரில் வெளியான இப்படமே ரவுடி மாப்ளே என்று மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகார்ஜுன் – விஷ்ணு இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். மற்றும் நாசர், நெப்போலியன், மனோரமா, பிரம்மானந்தம் புவனேஸ்வரி நடிக்கிறார்கள்.

மரகதமணி இசையமைக்கிறார்.

வசனம், பாடல்கள் எழுதுகிறார் EMS. ராஜா

ஸ்டன்ட் - ஸ்டன்ட் சிவா

எடிட்டிங் - பாலு

எழுதி இயக்கி இருப்பவர் பி.வாசு

சடங்குக்காக அப்பாவி ஒருவனுக்கு அழகான பெண் ஒருத்தியை திருமணம் செய்து வைக்கிறார்கள். அதில் ஏற்பட்ட பிரச்னை, அதன் முடிவு என்ன என்பது பரபரப்பான திரைக்கதையாக உருவாக்கப் பட்டுள்ளது.

பக்கா கமர்ஷியல் படமாக ரவுடி மாப்ளே உருவாகி உள்ளது. படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

தகவல் : சென்னை அலுவலகம்