விவசாயிகளின் பாரம்பரியமிக்க மாட்டு வண்டி சவாரி போட்டி

Published on 2019-05-27 15:19:10


யாழ் மாவட்ட சவாரி மன்றம் பதிவு செய்து விவசாயிகளின் பாரம்பரியமிக்க மாட்டு வண்டி சவாரிக்கு புத்துயிர் அளித்தமைக்காக நேற்று சாவகச்சேரி மட்டுவில் பிரதேச சவாரி திடலில் சவாரி போட்டி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வின் போது விவசாயிகள் மற்றும் சவாரி சங்கத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களை கௌரவிப்பு செய்திருந்தனர். மேலும், கிளிநொச்சி, பூநகரி வட்டுகோட்டை, அளவெட்டி, சாவகச்சேரி, கீரிமலை, சங்குவேலி, போன்ற பிரதேசங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தங்கபதக்கமும் பெறுமதியான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

logo