‘பிர­தீப பிர­ணம’ வாழ்நாள் சாத­னை­யாளர் விரு­துப் பெற்ற கலாநிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நா­த­னுக்கு பாராட்­டு­ விழா

Published on 2019-04-07 16:23:02

அதி­யுயர் விரு­தான ‘பிர­தீப பிர­ணம’ வாழ்நாள் சாத­னை­யாளர் விரு­தினைப் பெற்­ற­வரும், அருஸ்ரீ கலை­ய­கத்தின் பணிப்­பா­ள­ரு­மான கலாநிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நா­தனைப் பாராட்டும் விழா, கொழும்பு சுவாமி விவேகாந்த கலாசார நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி மாலை சிறப்­பாக நடை­பெற்­றது.
விழாவில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன், மனிதநேய மன்­றத்தின் தலைவி திரு­மதி அபி­ராமி கைலா­சப்­பிள்ளை, எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் சிலோன் (பிரைவேட்) லிமிட்­டெட்டின் பிரதம செயற்பாட்டு அதி­காரி எம்.செந்­தில்­நாதன் ஆகியோர் மங்­கள விளக்­கேற்­று­வ­தையும், நிலையப் பணிப்­பாளர் ராஜஸ்ரீ பெஹெர, திரு­மதி அபி­ராமி கைலா­சப்­பிள்ளை ஆகியோர் அருந்­த­திக்கு மலர்­மாலை அணி­விப்­ப­தையும், செல்வி அம்­பிகா தொடக்­க­வுரை ஆற்­று­வ­தையும், திரு­மதி ராஜஸ்ரீ பெஹெர, முன்னாள் ஐ.நா. அதி­காரி திரு­மதி செல்வி சச்­சி­தா­னந்தன், பிர­பல அறி­விப்­பாளர் அப்துல் ஹமீட் ஆகியோர் உரை­யாற்­று­வ­தையும் விழாவில் லக் ஷ்மி, (ஆசி­ரியர், ரெம்பிள் ஒவ் ஆட்ஸ்), செல்வி துவா­ரகா, செல்வி. ஷர்­மிலா சுப்­பி­ர­ம­ணியம் ஆகியோர் நடன விருந்­த­ளிப்­ப­தையும் கலாநிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நாதனின் மாணவர்கள் அவருடன் சேர்ந்து நிற்பதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு:கே.சுஜீவகுமார்)