முகேஷ் அம்பானி வீட்டுத் திருமணத்தில் பங்கேற்ற சுந்தர் பிச்சை

Published on 2019-03-11 09:35:33


தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும் - ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லேக்கா மேத்தாவுக்கும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டர் அரங்கில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, பாலிவுட் பிரபலங்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், மற்றும் நடிகர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.