இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திரதினம்

Published on 2019-02-04 13:16:01

இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.
6 ஆயிரத்து 454 பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பும் 850 கலை,கலாசார நடனக்கலைஞர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன் இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளின் சிறப்பு அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி மற்றும் அவரது பாரியாரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.