ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்­பு­ணர்வும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் 20 ஆவது வருட பூர்த்­தி

Published on 2018-09-28 16:20:37

ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்­பு­ணர்வும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் 20 ஆவது வருட பூர்த்­தி­யை முன்­னிட்டு இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்­தால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த 4 நாட்கள் இடம்­பெ­ற­வுள்ள மாநாடு நேற்று வியா­ழக்­கி­ழமை சினமன் கிராண்ட் ஹோட்­டலில் ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் காலை நடைபெற்ற அமர்வில் ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் உரையாற்றுவதையும் அருகில் இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மெனிக் டி சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் இருப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு: எஸ்.எம்.சலீம், தினேத் சமல்க)