கொழும்பு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் தேர் உற்சவம்

Published on 2018-07-26 16:49:13

கொழும்பு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் தேர் உற்சவம் நேற்றுக் காலை(25-07-2018) ஆரம்பமானது. தேரானது ஆலயத்திலிருந்து பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயம் நோக்கிப் புறப்பட்டது. நகர்வலத்தின்போது சுங்கத் திணைக்களம், இந்து ஊழியர் சங்கம், பொலிஸ் தலைமைக் காரியாலயம், ஜனாதிபதி மாளிகை, இந்திய தூதரகம், இ.தொ.கா. அலுவலகம், அலரிமாளிகை என்பவற்றின் சார்பில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், மனோ கணேசன், பி. திகாம்பரம், இந்தியத்தூதுவர் தரண்ஜித் சந்து, கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க மாகாண சபை உறுப்பினர்களான கே.ரி. குருசாமி, எம். உதயகுமார், முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, சட்டத்தரணி எம். மாரிமுத்து, மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரபிரகாஸ் ஆலய பிரதம அறங்காவலர் எம்.மாணிக்கவாசகம் மற்றும் சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)