பொன்மாலை பொழுது இசை நிகழ்ச்சி

Published on 2017-12-06 11:09:30

இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன தென்றல் அறிப்பாளரும் பாடகருமான முஹமட் இர்பானின் ஏற்பாட்டில் மாதம்தோரும் வழங்கி வரும் இளம் இசைக் கலைஞர்களுக்கு களம் அமைத்துக் தரும் பொன்மாலை பொழுது இசை நிகழ்ச்சி 03.12.2017 மாலை 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் டாக்டர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்தக் கொண்டார். இவருடன் ஜனாதிபதியின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ராகுலன் உட்பட பிரமுகர்கள் கலந்துக் கொண்;டார்கள். இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான பாடாசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டதுடன் இசை நிகழ்சியில் பாடல்களை மட்டக்களப்பினை சேர்ந்த சதா குழுவினர் பாடி இசை அமைத்தனர்.
இந் இசை நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன தென்றல் அலைவரிசையில் நேரடியாக ஒலிபரப்பட்டது.