மலேசியாவின் 'பேசு தமிழா பேசு' பேச்சு போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்

Published on 2017-11-13 12:27:22

மலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ வானவில்லும் இணையச் செய்தித்தளமான 'வணக்கம் மலேசியா'வும் இணைந்து ஏற்பாடு செய்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'பேசு தமிழா பேசு' எனும் அனைத்துலக பேச்சுப் போட்டி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

பேச்சு போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இருதி போட்டிக்கு சாருஜன் மெய்யழகன் இலங்கை, உமாபரன் மணிவேல் மலேசியா, நித்யா சைகன் மலேசியா, தமிழ்பரதன் தழிழ்காவலன் கவிதை இந்தியா ஆகியோர் பங்கு கொண்டனர். இவர்களில் இலங்கையின் கொழும்பு பலகலைகழக மாணவன் சாருஜன் மெய்யழகன் முதலாம் இடத்தையும் ஏனைய மூவரும் அடுத்த இடங்களை சமமாக பெற்றுக் கொண்டனர்.

வெற்றயீட்டியவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள், நினைவு பரிசில்கள், பண பரிசில்களும் வழங்கபட்டது.