மலையகத்தில் 9 வயது மாணவியின் இசை சாதனை

Published on 2017-10-26 12:59:26

மாத்தளை 'புனித தோமையர் பெண்கள்' பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்று வரும் 09 வயதான சிறுமி செல்வி மிதுனாஸ்ரீயின் இறுவட்டு வெளியீடும், அரங்கேற்றமும் கண்டி இந்து கலாசார மண்டபதில் நடைபெற்றது.

மிகவும் சிறிய வயதில் பக்திப் பாடல்களை பாடி இருவட்டு வெளியீடு செய்யும் அளவிற்கு மலையத்தில் உருவாகி உள்ளமை மிகவும் பாராட்டதக்க ஒன்றாகும்.
சிறிய வயதில் இனிமையான குரலில் பக்தி பாடல்களை பாடியுள்ளார்.

இதுவே மலையத்தில் சிறிய வயதில் மாணவி ஒருவர் பத்தி பாடல்களை பாடி இறுவட்டு வெளியிட்டதும் முதற் தடவையாகும்.