விசேட தேவையுடையோரின் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்புகை நீர்த்தாரை வீச்சு

Published on 2016-11-07 18:22:20

ஓய்வூதியம் பெறும் கால எல்லையை பூர்த்தி செய்யாது இராணுவத்தில் இருந்து இடைவிலகிய விசேட தேவையுடைய முன்னாள் இராணுவ வீரர்கள் இன்று கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்டமையால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேற முனைந்தமையால் பொலிசாரிற்கும் ஆர்ப்பாட்ட காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டிருந்தது. சிலர் நீர்த்தாரை பிரயோகத்தின்போது வீதியில் படுத்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டிருந்தனர்.

Pics By: J.SujeewaKumar