2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் ஆரம்பமானது முதல் இவ்வருடத்துடன் நான்காவது முறையாக தைப்பொங்கலை விமரிசையாக கொண்டாடியது.
இம்முறை தைப்பொங்கல் இம் மாதம் 17 ஆம் திகதி பக்கினம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை பெருமை சேர்க்கும் வகையில், காடினியா பிரிவு மாநகரசபை உறுப்பினர்களான எமாவுலின் (Emmavwlin - State MP பக்கினம் ), காடினியா ஷியா கவுன்சில் மேயர் பிறட்ஒவன் (Brettowen), பக்கினம் கில்ஸ் கவுன்சிலர் ஜக்கலக்ஸி (Jackkowzic), விக்டோரியா தமிழ் கலாச்சார கழக ஸ்தாபகரும் சங்கநாதம் 97.1 எப்.எம். ஸ்தாபகருமான விக்கி - விக்கிரமசிங்கம், வெளிநாட்டு, உள்நாட்டு வீட்டு விற்பனை பிரதிநிதி விதுஷினி ஆகியோர் கலந்துகொண்டு விழாவை மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.
தைப்பொங்கல் விழாவின் முதல் நிகழ்வாக 5 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளக, சங்கத்தமிழ் கலையகத்தின் ஏற்பட்டில் முதுபெரும் கலைஞர்களின் பறை இசை இடம்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அருகிவரும் நேரத்தில், இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
“ கலாவித்தியா ” நடனப்பள்ளியின் ஏற்பாட்டில் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றும் விதமாக கணேஷஸ்துதியும் ராகவீணா மியூசிக் அக்கடமி மாணவியின் நாதமஞ்சரி வீணை இசையும், சக்தீஸ்வரா நடனப்பள்ளியின் ஏற்பாட்டில் மீனாட்சி தாயே நிகழ்வு அம்பாளை போற்றி பாடியாடும் நடனமும், ரேகா தேவதாஸ் - கிறிஸ்மிவிகா நடனத்தாரகைகளின் சோலோ நடனமும் ஸருதிலய கேந்திராவின் நடன நிகழ்வும் வர்ணம் School of Fine Arts மாணவர்களின் இசை நகழ்வும் இடம்பெற்றது.
அரங்கம் நிறைந்த கூட்டம் காலை 8 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பொங்கல் தினத்தை பிரதிபலிக்கும் வகையில், சித்திரப் போட்டி நடைபெற்று கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
- முகப்பு
- Photo Galleries
- அவுஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா !
அவுஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா !
2026-01-21 17:19:59
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசிய அதிகார சமநிலையை குலைக்க விரும்பாத...
21 Jul, 2026 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
மேலும் வாசிக்க














