சிட்னியில் நடந்தேறிய 12வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடும் குளோபல் வர்த்தக மாநாடும்!

2025-12-23 16:42:48
அஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் பன்னிரண்டாவது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு, குளோபல் வர்த்தக மாநாடு ஆகிய இரண்டு மாநாடுகளும் டிசம்பர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெற்றன.
சிட்னி இந்திய தூதரக கான்சல் ஜெனரல் டாக்டர் ஜானகிராமன் முன்னிலையில், வி.ஐ.டி துணைத் தலைவர் டாக்டர் செல்வம் நோக்க உரை நிகழ்த்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., வேல்முருகன் எம்.எல்.ஏ, ஈஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோருடன் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்டீபன் பாலி, வாரன் கெர்பி, நாதன் ஹாகார்டி மிஸ் டொன்னா டேவிஸ், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹியூ மெக்டெர்மாட், சூசை பெஞ்சமின் -சட்ட ஆலோசகர் மற்றும் மலேசிய பினாங்கு மாநில அமைச்சர் சுந்தர் ராஜுவுடன் குமரேசன், குமரன் சட்டமன்ற உறுப்பினர்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை சிட்னி இந்தியா தூதரக தூதர் கான்சல் ஜெனரல் டாக்டர் எஸ். ஜானகிராமன் தொடங்கி வைத்தார்.
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தனது வரவேற்புரையில் உலகத் தமிழர் வணிக இணைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
குளோபல் வர்த்தக மாநாட்டில் மலேசிய பினாங்கு மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, மலேசியா தமிழர்கள் குறித்து பேசினார்.
தமிழக தொழிலதிபர்கள் அடையார் ஆனந்த பவன் சீனிவாச ராஜா, ராம்ராஜ் காட்டன் குழும நிறுவனர் கே.ஆர். நாகராஜன் ஆகியோர் வெற்றிகரமான வியாபார நுணுக்கங்களையும் தாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றியும் பேசினார்கள்.
இந்நிகழ்வில் தொழில் கருத்தரங்கம் நடைபெற்றபோது தமிழகத்தைச் சேர்ந்த டிவைன் பாரத் சேம்பர் நிறுவனத் தலைவர் குமரேசனும் அவுஸ்திரேலியாவில் உள்ள கிரேட்டர் கம்பர் லேண்ட் சேம்பர் தலைவர் இம்மானுவேல் செல்வராஜும் நிறைவேற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாட்டுத் தொழிலதிபர்களை இணைக்கும் வகையில் அமைந்தது.
மேலும், இந்த நிகழ்வில் சாதனைத் தமிழன் விருதுகள் வழங்கப்பட்டன. தொழில்முனைவர் சிறப்புப் பணிக்கான விருதினை ஜி. சக்திவேலும் சமூக தலைமைச் சிறப்புப் பணிக்கான விருதினை துர்கா ஓவனும் சமூக சேவைக்கான விருதினை ரெங்கராஜன் சிதம்பரநாதன் மற்றும் மோசஸ் வேதமுத்து ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அவுஸ்திரேலியாவின் தமிழறிஞரும் வழக்கறிஞருமான டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியனின் தலைமைத்துவம் குறித்த நூலும் வெளியிடப்பட்டது.
இதில் நடத்தப்பட்ட பரதநாட்டியம், நாட்டு நடனம் மற்றும் பறை இசை போன்ற கலாசார நிகழ்வுகள் பாரம்பரியத் தமிழ் மக்களின் பண்பாட்டையும் கலைச்சொல்லையும் இணைப்பதாக அமைந்தன.
இம்மாநாட்டின் மூலம் இந்தியா, அவுஸ்திரேலியா தொழில் முன்னேற்றத்துக்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
இந்த இரண்டு நாள் மாநாட்டு நிகழ்வுகளை ஜோன் தன்ராஜ் தொகுத்து வழங்கியிருந்தார்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right