வீரகேசரி வாசகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : வெளியானது புதிய சேவை

2025-10-24 17:42:16
தமிழ் பேசும் மக்களின் அபிமான பத்திரிகையான வீரகேசரியின், நாளிதழ் மற்றும் வார இதழ்களின் மின்னிதழ்களை தற்போது வட்ஸ்அப் செயலி ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

எமது அன்பான வாசகர்களின் தேவையை இலகுப்படுத்தும் வகையில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு, வீரகேசரியின் கிரேண்டபாஸ் அலுவலகத்தில், வீரகேசரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன், பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் மற்றும் சர்வதேச பாதிப்பின் ஆசிரியர் பிரபாகன் உள்ளிட்டோரின் பங்குபற்றுதலுடன் வியாழக்கிழமை (23) நடைபெற்றது.

இதன்போது வீரகேசரி மின்னிதழின் அபிமான வாசகர்கள் சிலருக்கு சேவையை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செயற்படுத்தி கொடுக்கப்பட்டன.

இந்த சேவையின் மூலம் தினந்தோறும் அச்சிடப்படும் வீரகேசரி நாளிதழ் பக்கங்களுக்கு மேலதிகமாக வெளிவரும் சிறப்பு பக்கங்களையும் வாசிக்கலாம்.

குறித்த வட்ஸ்அப் செயலி மூலமான சேவையை பெற்றுக்கொள்ள அறிமுகவிலையாக மாதமொன்றுக்கு 500 ரூபா அறவிடப்படும்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள 0776781930 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

மேலும் அருகிலுள்ள எமது கிளை காரியாலயத்தை தொடர்புகொண்டு இந்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right