பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீடு

2025-10-13 17:42:36
சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர் பாரியார், கவிதாயினி பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (12) கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மூத்த பத்திரிகையாளரும் தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியருமான வீரகத்தி தனபாலசிங்கம் இந்நிகழ்வினை தலையேற்றார்.

இந்த நுால் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் கலந்துகொண்டு நூல்களின் பிரதிகளை வழங்கி வைத்ததுடன் பிரதம அதிதி உரையையும் நிகழ்த்தினார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு நூல் விமர்சன உரையையும் நிகழ்த்தினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனும் உரை நிகழ்த்தினார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். நிசாம் காரியப்பர் கலந்துகொண்டு நூல் பிரதிகளையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பத்திரிகை ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right