வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தேர்திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ புதன்கிழமை (09) நடைபெற்றுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ச்சியாக 15 நாள்கள் இடம்பெறும் திருவிழாவில் 14 ஆம் திருவிழாவான ) புதன்கிழமை தேர்திருவிழா நடைபெற்றது. அதிகாலை சிறப்புப் பூஜைகள் முடிவடைந்த பின்னர் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேரில் ஏறி நாகபூசணி அம்மன் காட்சியளித்தார்.
நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். நயினை நாகபூசணி அம்மனைக் காண இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் கடல் கடந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையிலே இலங்கையின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனின் தேர் உலா காட்சியைக் காண திரண்டு வந்தனர்.
பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கண்களைக் கவரும் வகையில் அம்பாள் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நயினை அம்மனின் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
- முகப்பு
- Photo Galleries
- நயினை நாகபூசணி அம்பாள் இரதோற்சவம்!
நயினை நாகபூசணி அம்பாள் இரதோற்சவம்!
2025-07-09 15:21:19
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க














