கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய 191 ஆவது வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி 13 ஆம் திகதி மாலை 5 மணியளவில் கொட்டாஞ்சேனை புனித லூரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமாகி திருச்சொரூப ஆசீருடன் நிறைவுபெற்றது.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய 191 ஆவது வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில், 12 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெஸ்பர் ஆராதனைகளை கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றதுடன் பேராயர் பக்தர்களுக்கு புனித அந்தோனியாரின் திருசொரூப ஆசிர்வாதங்களை வழங்கினார்.
13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் ஜே. டி. அன்டனி ஆண்டகையும் கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகையும் ஒப்புக்கொடுத்ததுடன் பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசிர்வாதங்களையம் வழங்கினர். திருவிழா திருப்பலியில் பெருந்திரளான பக்தர்களும் குருமார்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய 191 ஆவது வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய 191 ஆவது வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி
2025-06-14 09:53:39
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க














