கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம்

2025-06-03 12:14:34
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191 ஆவது வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை 3 ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

கொடியேற்றத்திற்கு முன்னதாக இன்றையதினம் தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை பெருவிழா இடம்பெறும்.

திருவிழா தினமான 13 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, திருவிழா பாடல் திருப்பலிகள் அன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின் தலைமையில் சிங்கள மொழியிலும், நண்பகல் 2 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் ஜே.டி. அன்தனி ஆண்டகையின் தலைமையில் ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படும்.

புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் அன்றையதினம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் நிறைவுபெறும்.

( படப்பிடிப்பு : ஜேய் ஜெயக்குமார் )
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right