கொழும்பு மகளிர் கல்லூரியில் “பெண்மையைப் போற்றுவோம்” நாட்டிய நாடக நிகழ்வு

2025-04-01 17:48:47
கொழும்பு மகளிர் கல்லூரியின் 125ஆவது அகவையை முன்னிட்டு கல்லூரியின் தமிழ் மாணவர் சங்கம் - 2024/ 25 ஏற்பாடு செய்த “பெண்மையைப் போற்றுவோம்” நாட்டிய நாடகம் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (29) மாலை நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் தீபிகா தசநாயக்க, உப அதிபர் ரன்மலி பாலசூரிய ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நாட்டிய நாடக நிகழ்வில் வீரமங்கை வேலு நாச்சியாரின் சரித்திரம், கருணை உள்ளம் படைத்த அன்னை தெரேசாவின் வாழ்க்கை, மகளிரின் கல்விக்காக தம்மை அர்ப்பணித்த கொழும்பு மகளிர் கல்லூரியின் அதிபர்கள் ஆற்றிய அளப்பரிய சேவைகளையும் எடுத்துரைக்கும் விதமாக நாட்டிய நாடகம் அமைக்கப்பட்டிருந்தது.

நடனக் கலைஞர் பவானி குகப்பிரியாவின் நெறியாள்கையில் அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகம் மகளிர் கல்லூரியின் இவ்வருடத்துக்கான முதல் படைப்பாக மேடையேறியது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களையும் நிகழ்வின் கலையம்சங்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)



image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right