யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஜூபிலி ஆண்டு நிறைவு விழா

2025-03-18 12:49:33

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஜூபிலி ஆண்டு நிறைவு விழா திங்கட்கிழமை (17 ) கல்லூரிச் சமூகத்தினால் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் பழைய மாணவர்களான யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் குருக்களுடன் இணைந்து யாழ்.மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புகொடுத்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் இலங்கையின் பலபாகங்களில் இருந்து வந்த பழைய மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜூபிலி கேக்கை மன்னார் மறைமாவட்ட ஆயர் வெட்டுவதையும், கல்லூரியில் சேவையாற்றிய ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்களையும் காணலாம்.

(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right