சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-14 17:23:56
"லயநாதாலய" இயக்குநரும் மிருதங்க வித்துவானுமான வைரவப்பிள்ளை வேனிலானின் மாணவனும் மருத்துவ தம்பதியான டாக்டர் செல்லத்துரை அசோகன் - டாக்டர் ஹேமநளினி ஆகியோரின் புதல்வருமான சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (08) நடைபெற்றது.

இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன், வீணா நாதா லயா இயக்குநர் “இசைக்கலைமணி” இராதை குமாரத்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மங்கள விளக்கேற்றுவதையும் "லய நாதலயா" இயக்குனர் வை. வேனிலான் அரங்கேற்ற நாயகன்செல்வன் சதன்யன் அசோகனின் இசை திறமையையும் போற்றத்தக்க இசைத்துறை சார் பங்களிப்பையும் கருத்திற்கொண்டு "லய நாத பாரதி" என்று சிறப்புப் பட்டம் வழங்கி கௌரவிப்பதையும், பாட்டு இசைத்த நயினை பத்மநாதன் - சிவமைந்தன் மற்றும் இசைக்கலைஞர்கள் "மிருதங்க வித்தகர்" எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கி கௌரவிப்பதையும், மாணவனின் இசை அரங்கேற்ற நிகழ்வையும் அதிதிகள் கௌரவிக்கப்படுவதையும் அரங்கேற்றத்தில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right