கொழும்பில் சீரடி சாயி பாபாவின் மகா சமாதி தினம்

2024-10-12 16:49:47
மகான் சீரடி சாயி பாபாவின் மகா சமாதி தினம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கொழும்பு சீரடி சாயி பாபா மத்திய நிலையத்தில் அதன் தலைவர் எஸ்.என். உதயநாயகம் தலைமையில் கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி தினமான சனிக்கிழமை (12) காலை சீரடி சாயி பாபாவுக்கு "தங்க மகுடம்” அணிவிக்கும் நிகழ்வில் நிலையத்தின் தலைவர் தங்கத்திலான கிரீடத்தை சாயி பாபாவின் ஆசீர்வாதத்துடன் பக்தர்கள் முன்னிலையில் ஊர்வலமாக கொண்டுவருவதையும், அதனைக்கொண்டு சீரடி சாய் பாபாவுக்கு மகுடாபிஷேகம் செய்வதையும், சாய் பஜனையையும் மங்கள ஆராத்தியையும், தொடர்ந்து சாயி நிலையத்தில் சூரிய மின் சக்திக்கான மின் இணைப்பை முருகேசு தெய்வநாயகம் அங்குரார்ப்பணம் செய்து வைப்பதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right