கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நவராத்திரி விழாவின் 4ஆம் நாள் நிகழ்வு

2024-10-07 18:33:44
கொழும்பு வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் 4ஆம் நாள் லக்ஷ்மி பூஜை ஞாயிற்றுக்கிழமை (6) மாலை நடைபெற்றது.
கொலு பூஜையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக நீதியரசர் திரு. திருமதி. குமாரரட்ணம் மற்றும் நீதியரசர் துரைராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு கொலு பூஜைகளை தொடர்ந்து கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன்போது செல்வி வினோதினி சுரேஷின் பேச்சு, முதுகலைமாணி ஸ்ரீமதி நிவாஷினி அபிமாறனின் அனுக்கிரஹதா இசைக்கூட மாணவர்களின் "மயூரார்ப்பணம்", பரத கலாவித்தகர் ஸ்ரீமதி தாருண்யா கார்த்தியின் ஸ்ரீராம் சிருஷ்டி நாட்டியப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற "சக்தி" நாட்டியம் ஆகியவை நிகழ்த்தப்பட்டன.
அதனை தொடர்ந்து, திருவிளக்குப் பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜையோடு நிகழ்வுகள் நிறைவடைந்தன.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right