களுத்துறை தும்பர தோட்டத்தில் 70 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியது மலையக மகளிர் மன்றம்

2024-07-08 18:20:04

களுத்துறை மாவட்டத்தில் உள்ள இங்கிரய, தும்பர தோட்டம் இல.01இல் வசித்துவரும் 70 குடும்பங்களுக்கு மலையக மகளிர் மன்றத்தின் சார்பில் அதன் தலைவி சண்முகப்பிரியா கார்த்திக் தலைமையிலான உறுப்பினர்கள் கடந்த 4ஆம் திகதி அந்த லைன் வீடுகளுக்குச் சென்று உலர் உணவுப்பொருட்கள், உடுதுணிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
இக்குழுவில் உப தலைவி சரோஜா சண்முகம், பொருளாளர் உதயா தங்கராஜ், உப பொருளாளர் சுசானி குபேந்திரன், முன்னாள் தலைவி இந்திரா செல்வராஜா, மற்றும் மகேஸ்வரி சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து பொருட்களை வழங்குவதை படங்களில் காணலாம்...

படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right