இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், கலசங்கள், உற்சவ மூர்த்திகள் கொழும்பிலிருந்து நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தை நோக்கி பவனி

2024-05-17 14:20:01
நுவரேலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவினை முன்னிட்டு இந்தியாவின் அயோத்தி ராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சீர்வரிசை பொருட்கள், கோயம்புத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் ஆகியன மயூரபதி ஆலயத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (17) காலை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பயணம் ஆரம்பமானது.
இதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினரும் சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய அரங்காவலருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் பெரியசாமி சுந்தரலிங்கம் (மயூரபதி ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்) ஆகியோர் விசேட அழைப்பில் கலந்துகொண்டார்கள்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right