நந்திதா சேரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-05-10 18:30:46
"தியாகராஜர் கலைக் கோவில்" நடனப்பள்ளியின் இயக்குநர் 'நாட்டிய கலைமணி' பவானி குகப்பிரியாவின் மாணவி செல்வி. நந்திதா சேரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 4ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பம்பலப்பிட்டி, மாணிக்க பிள்ளையார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயன், சிறப்பு விருந்தினராக இலங்கை மத்திய வங்கியின் பிரதிப் பணிப்பாளர் குகவதி விஜிரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆசிரியர், தென்கயிலை முதல்வர் அகத்திய அடிகளார், பெற்றோர்கள் ஆகியோர் மங்கள விளக்கேற்றுவதையும் மாணவிக்கான கௌரவத்தை ஆசிரியர் வழங்குவதையும் மாணவியின் நடனத்தோற்றங்களையும் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right