பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டியில் Maxim Impressions Lanka (Pvt) Ltd அணி சாம்பியன்

2024-04-07 12:00:47

இலங்கை அச்சகத்தார் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 'பலவான்களின் சமர்' என அழைக்கப்படும் பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டி கொழும்பு 7இல் அமைந்துள்ள என்.சி.சி. (N.C.C.) மைதானத்தில் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இலங்கை அச்சகத்தார் சங்கத்தினால் 11ஆவது தடவையாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அச்சக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 மகளிர் அணிகளும் 52 ஆடவர் அணிகளும் பங்குபற்றின.

இந்தப் போட்டியில் சம்பியனான Maxim Impressions Lanka (Pvt) Ltd அணி வெற்றிக்கிண்ணத்தையும் 100,000 ரூபாய் ரொக்கப்பணப் பரிசையும் தனதாக்கிக்கொண்டது.

போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட JF & I packaging pvt ltd 50,000 ரூபாய் ரொக்கப்பணப் பரிசை பெற்றுக்கொண்டது.

Printers Sixes 2024 மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு Advanced Printing Technologies, Colorchroma, Flexiprint & Print USA, JDC Printing Technologies, KWO Printing Needs, Print Care, Sithara LTD ஆகியன அனுசரணைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)







image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right