சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை

2024-02-04 18:46:03
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆலயங்களில் சமய ஆராதனைகள் நடைபெற்றன. கொழும்பு பம்பலப்பிட்டி, பழைய கதிரேசன் ஆலயத்தில் (வஜிர பிள்ளையார்) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாட்டில் சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விசேட பூஜையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சின்மயா மிஷன் சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி, சுவாமி அக்ஷராத்மானந்தா மகராஜ், பணிப்பாளர் யதுகுலசிங் அனிருத்தனன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு பூஜை தட்டு வழங்கப்படுவது முதலான அம்சங்களை படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right