சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வீரகேசரிக்கு 11 விருதுகள்

2023-12-13 13:17:55
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 24வது தடவையாக நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வீரகேசரி வெளியீட்டு நிறுவனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் 11 விருதுகளை தட்டிக்கொண்டது.

24ஆவது தடவையாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்கிஸை மவுண்ட்லெவேனியா ஹோட்டலின் எம்பயர் போல் ரூமில் நடைபெற்றது.


பொதுமக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் கொண்டு சேர்க்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களின் சேவையையும் பணியையும் அங்கீகரிப்பதே இந்த விருது வழங்கலின் மிக முக்கிய நோக்கமாகும்.

1998ஆம் ஆண்டுகாலப் பகுதியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் முற்றுமுழுதாக கட்டுப்படுத்தப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அதற்கு எதிராக இலங்கையின் ஊடகத்துறை போராடிக்கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை பத்திரிகைகள் வெளியீட்டாளர் சங்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்பன இணைந்து செயற்பட ஆரம்பித்தன.

அதனடிப்படையில் 1998ஆம் ஆண்டில் இந்த அமைப்புக்கள் இணைந்து ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தன. கொழும்பில் நடந்த அந்த மாநாட்டில் இலங்கையின் ஊடகத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட பரந்துபட்ட திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்பு தொடர்பான கொழும்பு பிரகடனம் என்ற பெயரில் ஒரு பிரகடனமாக இந்த திட்டம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையிலேயே சிறந்த ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் சேவையை அங்கீகரித்து விருது வழங்கும் விழா 24 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படியே இம்முறை 24ஆவது சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பமாக அதிதிகள் வருகை இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து பிரதம அதிதியின் வருகை இடம்பெற்றது. பின்னர் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊடக சுதந்திரத்திற்காக உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்சியின் விசேட அம்சமாக இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலியைச் சேர்ந்த சின்னத்துரை தில்லைநாதன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

55 வருடங்களுக்கு மேற்பட்ட ஊடக அனுபவத்தைக்கொண்ட அல்ஹாஜ் எம்.ஏ.எம். நிலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பத்திரிகைத்துறை பணியை லேக்கவுஸில் ஆரம்பித்து டெயிலி நியூஸ் பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பதவி நிலை வகித்து பின்னர் சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக சேவையாற்றிய எச்.எல்.டி. மஹிந்தபாலவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

45 வருடகால ஊடகப்பணியாற்றிய திருமதி சீதா ரஞ்சனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பிரேமாவதி மன்பேரி படுகொலைச் சம்பவம் தொடர்பில் முதன்முதலில் உலகிற்கு உண்மையை வெளிக்கொணர்ந்தவரும் 40 வருடங்களுக்கு மேலக ஊடகப்பணியாற்றியவருமான ஸ்டான்லி சமரசிங்க வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


2022ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் 'சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதை' www.virakesari.lk தனதாக்கியது.

இந்த விருதை வீரகேசரி இணையத்தளத்தின் உதவி ஆசிரியர் வீ.பிரியதர்சன் மற்றும் செய்தி ஆசிரியர் சித்திக்காரியப்பர், ஊடகவியலாளர் எஸ்.சரணியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், 'சிறந்த காணொளி கதை கூறலுக்கான' விருதையும் திறமைச் சான்றிதழையும் வீரகேசரி டிஜிட்டல் பெற்றுக்கொண்டது.

இந்த விருதுகளை வீரகேசரி டிஜிட்டல் பிரிவின் உதவி செய்தி ஆசிரியர்களான எம்.டி. லூசியஸ் மற்றும் எஸ்.லோகேஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ஆண்டின் சிறந்த வர்த்தக செய்தியிடலுக்கான விருதை தமிழ் மொழிப் பிரிவில் வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ரொபர்ட் அன்டனி பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறிவர்தன விருதை தமிழ் மொழிப் பிரிவில் வீரகேசரி வார இதழின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் அறிக்கையிடலுக்கான விருதை வீரகேசரி வாரவெளியீட்டின் உதவி செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமார் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த விவரணக் கட்டுரைக்கான உபாலி விஜயவர்தன விருது தமிழ் மொழிப் பிரிவில் வீரகேசரியின் ஊடகவியலாளர் ஹஷ்தனி ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டதுடன் திறமைச் சான்றிதழை வீரகேசரியின் ஊடகவியலாளர் புஷ்பராஜுக்கு கிடைத்தது.

தகவல் உரிமைச்சட்ட மூலத்தைப் பயன்படுத்திய செய்தி அறிக்கையிடலுக்கான விருதை வீரகேசரி வாரவெளியீட்டின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த கேலிச்சித்திரத்திற்கான விருதை வீரகேசரியின் கேலிச்சித்திர ஊடகவியலாளர் எஸ். தர்மதாஸ் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த சமூகப்பிரச்சினைகள் பற்றிய அறிக்கையிடலுக்கான சுப்ரமணியம் செட்டியார் திறமைச் சான்றிதழை வீரகேசரி வார வெளியீட்டின் உதவி செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமார் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த சுகாதார மற்றும் மருத்துவ அறிக்கையிடலுக்கான விருதை தமிழ்மொழிப் பிரிவில் தினக்குரலின் ஊடகவியலாளர் பாத்திமா ஹுஸ்னா பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த விளையாட்டு செய்தி அறிக்கையிடலுக்கான விருதை தமிழ்மொழிப் பிரிவில் தினக்குரலின் ஊடகவியலாளர் நவம் லெப்டின் ராஜ் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதை சிலோன் டுடே பத்திரிகையின் பிரதி ஆசிரியர் ராமையா சுலோச்சனா பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் புலனாய்வு ஊடகவியலுக்கான திறமைச்சான்றிதழை சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் சந்திரநாதன் ரூபதீசன் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த விளையாட்டு செய்தியாளருக்கான விருதை சிங்கள மொழிப் பிரிவில் சிலுமின பத்திரிகையின் ஊடகவியலாளர் பவாஸ் முஹம்மட் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த மற்றும் மருத்துவ அறிக்கையிடலுக்கான திறமைச் சான்றிதழை சிங்கள மொழிப் பிரிவில் மௌபிம பத்திரிகையின் ஊடகவியலாளர் டபிள்யூ.ஜே.எஸ்.பி. மிதுன் திவ்யங்க சில்வா பெற்றுக்கொண்டார்.

16 பிரிவுகளின் கீழ் அச்சு ஊடகங்களுக்கான போட்டித்தெரிவுகளும் 2 பிரிவுகளின் கீழ் இணைய ஊடகங்களுக்கான போட்டித் தெரிவுகளும் இடம்பெற்ற நிலையில், 36 விருதுகள் வெல்லப்பட்டுள்ளதுடன் 16 திறமைச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right