சாயி ஸ்ருதிலயா கலைக்கூட மாணவியின் கர்நாடக இசை அரங்கேற்றம்

2023-11-02 17:31:45
சாயி ஸ்ருதிலயா கலைக்கூடத்தின் இயக்குநர் கலை இளவரசி வைத்திய கலாநிதி சாயிலக்ஷ்மி லோகீஸ்வரனின் மாணவியும், திருமதி ஸ்ரீ குமரன் - மயூரி தம்பதியரின் புதல்வியுமான சக்திகா ஸ்ரீகுமரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு-05இல் அமைந்துள்ள பௌத்த கலாசார மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும் சிவபூமி அறக்கட்டளை இலங்கைக்கான தலைவரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி ஆறு திருமுருகனும், கௌரவ விருந்தினராக கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் திருமதி அருந்ததி ராஜ விஜயனும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் அதிதிகள் மங்கள விளக்கேற்றுவதையும், அரங்கேற்றம் காணும் சக்திகா ஸ்ரீ குமரன் பாடுவதையும், அவருடன் அணிசேர் வாத்திய கலைஞர்கள் வாத்தியம் இசைப்பதையும், இவர்களுடன் அரங்கேற்றம் காணும் மாணவியின் குரு சாயிலக்ஷ்மி லோகீஸ்வரன் அமர்ந்திருப்பதையும், குருவும் சிஷ்யையும் கௌரவிக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்துகொண்டவர்களுள் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right