இலங்கை வங்கி இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் 'நவராத்திரி விழா'

2023-10-18 19:11:27
இலங்கை வங்கி இந்து மன்றத்தின் தலைவர் சிவாஞ்ஜனின் ஏற்பாட்டில் 'நவராத்திரி விழா 2023' வெகுசிறப்பாக இலங்கை வங்கி 3ஆம் மாடி கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை (16) வங்கியின் தலைவர் ரொன் சி பெரேரா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைவர் உட்பட இலங்கை வங்கி உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷ்ராத்மானந்தா சிறப்புரை ஆற்றினார்.
மேலும் மன்ற உறுப்பினர்களின் பக்திப்பாடல், வங்கி ஊழியர்களின் குழந்தைகளின் நவராத்திரி பாடல்கள், அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், வட இந்திய நாட்டிய நடனம் மற்றும் வி.சுவாமிநாத சர்மா குழுவினரின் இசை அர்ச்சனை என்பனவும் நடைபெற்றன.
கலை நிகழ்வில் பங்குபற்றியோருக்கான அன்பளிப்பினை உதவிப் பொதுமுகாமையாளர் சுமங்கலா பிரபாகரன், உதவிப் பொதுமுகாமையாளர் எஸ்.கிருஷ்ணகுமார், உதவிப் பொது மேலாளர் ஐங்கரன் ஆகியோர் வழங்கினார்கள்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right